உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லுாரியில் மூன்றடுக்கு பாதுகாப்பு

ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கல்லுாரியில் மூன்றடுக்கு பாதுகாப்பு

கடலுார்: கடலுார் லோக்சபா தொகுதி தேர்தல் முடிந்து, ஓட்டுப்பெட்டிகள், கடலுார் தேவானம்பட்டினம் கல்லுாரியில் வைக்கப்பட்டு, மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.தமிழகத்தில் நேற்று முன்தினம் லோக்சபா தேர்தல் நடந்தது. வரும் ஜூன் 4ம் தேதி ஓட்டுகள் எண்ணப்படுகிறது. கடலுார் லோக்சபா தொகுதியில் கடலுார், விருத்தாசலம், நெய்வேலி, பண்ருட்டி, திட்டக்குடி, குறிஞ்சிப்பாடி ஆகிய 6 சட்டசபை தொகுதிகளில், 1,509 ஓட்டுச் சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு, தேர்தல் நடத்தப்பட்டது. 14,12,7 வாக்காளர்கள் உள்ள நிலையில், 10,21,114 ஓட்டுகள் பதிவாகியது. ஒட்டுப்பதிவு சதவீதம் 72.28 ஆகும்.தேர்தல் முடிந்து, கடலுார் லோக்சபா தொகுதிக்குட்பட்ட 6 சட்டசபை தொகுதிகளின் ஓட்டு இயந்திரங்கள், ஓட்டு எண்ணும் மையமான கடலுார் தேவனாம்பட்டினம் அரசு கல்லுாரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் நேற்று காலை வரையில் வந்த நிலையில், நேற்று காலை கலெக்டர் அருண்தம்புராஜ், ஓட்டுப்பெட்டிகள் வைக்கப்பட்ட அறையை, வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் பூட்டி சீல் வைத்தார். எஸ்.பி., ராஜாராம், டி.ஆர்.ஓ., ராஜசேகரன், ஆர்.டி.ஓ., அபிநயா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.அப்போது கலெக்டர் கூறுகையில், கல்லுாரியில் 6 சட்டசபை தொகுதி வாரியாக தனித்தனி அறைகளில் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ளது. அனைத்து அறைகளிலும் கண்காணிப்பு கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. 24 மணி நேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் இருப்பார்கள். ஸ்ட்டராங் ரூமிற்கு முதல் அடுக்கில் மத்திய துணை ராணுவத்தினர், இரண்டாம் அடுக்கில் தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், மூன்றாவது அடுக்கில் உள்ளூர் போலீசார் பணியில் ஈடுபட்டுள்ளனர்.வேட்பாளர் முகவர்கள் தினமும் பார்வையிட அனுமதிக்கப்படுவர். அவர்களுக்கு என தனியாக ரூம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அங்கிருந்தவாறு சி.சி.டிவி., கேமிரா மூலம் காண்காணிக்கலாம்.மாவட்டத்தில் தேர்தல் அமைதியாக நடந்து முடிந்தது. கடந்த தேர்தலை விட ஓட்டுப்பதிவு சதவீதம் குறைந்துள்ளது. இது வெயில் தாக்கம் காரணமாக இருக்கலாம் என, தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி