உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வரலட்சுமி நோன்பு சிறப்பு பூஜை

வரலட்சுமி நோன்பு சிறப்பு பூஜை

பண்ருட்டி : திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில், வரலட்சுமி நோன்பையொட்டி உற்சவர் தாயார் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.பண்ருட்டி அடுத்த திருவதிகை சரநாராயண பெருமாள் கோவிலில், ஆடி 5ம் வெள்ளிக்கிழமை மற்றும் வரலட்சுமி விரதம் முன்னிட்டு நேற்று முன்தினம் காலை விஸ்வரூப தரிசனம், நித்யபடி பூஜை, உற்சவர் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது. மாலை உற்சவர் தாயார் சிறப்பு அலங்காரத்தில் உள்புறப்பாடு நடந்து, ஊஞ்சல் உற்சவத்தில் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை