| ADDED : மே 24, 2024 05:23 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் ரயில் நிலைய வாகன நிறுத்தத்தில் மேற்கூரை இல்லாமல் வாகனங்கள் வீணாகி வருகிறது.விருத்தாசலம் ரயில் நிலையம் வழியாக 50க்கும் மேற்பட்ட ரயில்கள் செல்கின்றன. விருத்தாசலம், திட்டக்குடி, நெய்வேலி, பண்ருட்டி, ஸ்ரீமுஷ்ணம் பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கானேர் பயனடைகின்றனர். பயணிகள் கொண்டு வரும் வாகனங்கள், ரயில் நிலைய வளாகத்தில் உள்ள வாகன நிறுத்தத்தில் நிறுத்தி செல்கின்றனர். அதில், டூவீலருக்கு 15 ரூபாய், கார் உள்ளிட்ட வானகங்களுக்கு 100 ரூபாய் தினசரி கட்டணமாக பெறப்படுகிறது.ஆனால், திறந்த வெளியில் நிறுத்தப்படும் வாகனங்கள் வெயில், மழை காலங்களில் அடிக்கடி பழுதாகின்றன. காற்று இறங்குவது, பிளக் பழுது போன்ற இடர்பாடுகள் ஏற்படுவதால் ரயில் நிலையத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவிற்கு வாகனங்களை தள்ளிச்செல்லும் அவலம் ஏற்படுகிறது. இதனால் கட்டணம் செலுத்தியும் பாதுகாப்பில்லாத நிலையே தொடர்கிறது.ரயில் நிலையத்தில் ஒப்பந்தம் மூலம் வாகன நிறுத்தம் எடுக்கப்படுகிறது. எனவே, வாகன நிறுத்தத்தில் மேற்கூரை அமைத்து, பாதுகாப்பான நிலையை உருவாக்கிட தெற்கு ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.