உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கீரப்பாளையம் புறவழிச்சாலை முடிவது எப்போது; ஜவ்வாக நடக்கும் பணியால் மக்கள் அதிருப்தி

கீரப்பாளையம் புறவழிச்சாலை முடிவது எப்போது; ஜவ்வாக நடக்கும் பணியால் மக்கள் அதிருப்தி

புவனகிரி வழியாக கடலூர், புதுச்சேரி, சென்னை மற்றும் சேலம், கோயம்புத்தூர் உள்ளிட்ட நகரங்களுக்கு அதிக அளவில் அரசு மற்றும் தனியார் பஸ்கள், லாரிகள் இயக்கப்படுகிறது. குறுகலான சாலையில் அதிக வாகனங்கள் சென்றதால் போக்குவரத்து நெரிசல், விபத்துக்கள் ஏற்பட்டு வந்தது.அதையடுத்து, சிதம்பரம் புறவழிச்சாலை இணைப்பு பகுதியில் இருந்து, புவனகிரி அருகே கீரப்பாளையம் வரையில், நான்கு வழிச்சாலையாக அமைக்க, நெடுஞ்சாலை துறை முடிவு செய்தது. அதற்காக, ரூ. 20 கோடியே 80 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டது. அதையடுத்து, கடந்த ஜனவரி மாதம் அமைச்சர் பன்னீர்செல்வம் சாலை விரிவாக்க பணியை துவக்கி வைத்தார். பணிகள் மந்தமாக மேற்கொண்டதால், போக்குவரத்து நெரிசலுடன் விபத்துகள் அதிகரித்தது. இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிட்டு சுட்டிக்காட்டப்பட்டது. அதன் எதிரொலியால் தற்போது பணிகள் துவங்கி நடந்து வருகிறது. ஆனாலும், பணிகளை விரைந்து முடிக்காததால் விபத்துக்கள் நடப்பது வாடிக்கையாக உள்ளது. எனவே, சாலை விரிவாக்க பணியை விரைந்து முடித்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை