உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / 10 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர் குடும்பங்களின் ஓட்டு யாருக்கு?

10 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர் குடும்பங்களின் ஓட்டு யாருக்கு?

நெய்வேலி: என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்கள் ஓட்டு யாருக்கு என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.என்.எல்.சி.,யில் பணியாற்றி வரும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்த தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் ஓட்டுகள் யாருக்கு என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகியுள்ளது. ஒப்பந்த தொழிலாளர்கள் கடந்த ஒரு ஆண்டாக தங்களுக்கு பணி நிரந்தரம் வேண்டும் என்பது உள்ளிட்ட சில கோரிக்கைளை முன்வைத்து வேலை நிறுத்தம் உள்ளிட்ட பலகட்ட போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.தற்போது இந்த விவகாரம் சென்னை ஐகோர்ட்டில் உள்ளது. ஒப்பந்த தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் நிறைவேற்றி தராமல் இழுத்தடிப்பதால் லோக்சபா தேர்தலை புறக்கணிக்க போவதாக அறிவித்து இருந்தனர். இன்னும் கோரிக்கைகள் நிலுவையில் இருப்பதால் என்.எல்.சி.,யில் பணியாற்றும் 10 ஆயிரம் ஒப்பந்த தொழிலாளர்களின் ஓட்டுகள் யாருக்கு என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை