உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ரயிலில் சிக்கி வாலிபர் பலி

ரயிலில் சிக்கி வாலிபர் பலி

விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே ரயிலில் சிக்கி பலியான வாலிபர் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.விருத்தாசலம் அடுத்த பூவனுார் ரயில் நிலையம் அருகே நேற்று முன்தினம் காலை 40 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவரின் சடலம், ரயில் பாதையோரம் கிடந்தது. தகவலறிந்த ரயில்வே சப் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன் தலைமையிலான போலீசார் சென்று விசாரித்தனர்.அதில், இறந்து கிடந்தவரின் முகம், உடல் சிதைந்திருந்த நிலையில், அவர் கருநீலம் நிற லோயர், நீல கலர் அரைக்கை டீசர்ட் அணிந்திருந்தார். டீ சர்ட்டில் முன்புறம் மற்றும் பின்புறம் இரட்டை இலை சின்னம் தைத்திருந்தது. அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என எந்த விபரம் தெரியவில்லை.சென்னையில் இருந்து திருச்சி சென்ற ரயிலில் இருந்து தவறி விழுந்து இறந்திருக்கலாம் என தெரிந்தது. இது குறித்து விருத்தாசலம் ரயில்வே போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை