உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுாரில் டாஸ்மாக் பணியாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய 2 சிறுவர்கள் கைது

கடலுாரில் டாஸ்மாக் பணியாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய 2 சிறுவர்கள் கைது

கடலுார் : கடலுாரில் டாஸ்மாக் பணியாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய வழக்கில், இரு சிறுவர்களை போலீசார் கைது செய்தனர்.கடலுார் மஞ்சக்குப்பம் ஆல்பேட்டை கன்னியக்கோவில் தெருவை சேர்ந்தவர் மோகன்,55; டாஸ்மாக் விற்பனையாளர். இவரது வீட்டில், கடந்த19ம் தேதி இரவு மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசினர்.கடலுார் புதுநகர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில் கிடைத்த தகவலின் பேரில் அதே பகுதியை சேர்ந்த 17 வயதுடைய கல்லுாரி மாணவர் மற்றும் 15 வயதுடைய பள்ளி மாணவர் ஆகிய இருவரையும் பிடித்து விசாரித்தனர். அதில், கல்லுாரி மாணவர் காதலுக்கு, மோகன் எதிர்ப்பு தெரிவித்தால், இருவரும் சேர்ந்து மோகன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசியது தெரியவந்தது.அதன்பேரில் போலீசார், சிறுவர்கள் இருவரையும் கைது செய்து மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலுார் சிறுவர்கள் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை