| ADDED : நவ 13, 2025 07:08 AM
கடலுார்: கடலுாரில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்திய 2 பேரை போலீசார் கைது, 125 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்தனர். பெங்களூருவில் இருந்து கூரியர் மூலம், கடலுாருக்கு தடை செய்யப்பட்ட புகையிலைப்பொருட்கள் கொண்டு வரப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து, நேற்று காலை கம்மியம்பேட்டை பகுதியிலுள்ள தனியார் பார்சல் சர்வீஸில் இருந்து மினிவேன் ஒன்றில் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை ஏற்றுவதை தனிப்படை போலீசார் கண்டறிந்து கையும் களவுமாக பிடித்தனர். விசாரணையில் அந்த நபர் புவனகிரி அடுத்த தீர்த்தனகிரியை சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பதும், அவருடன் கொத்தட்டை கிராமத்தைச் சேர்ந்த மணியரசன், 26, என்பவர், கடத்தலில் தொடர்புடையவராக இருந்ததும் கண்டறியப்பட்டது. இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்து, 125 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் மற்றும் மினி வேனை பறிமுதல் செய்தனர். திருப்பாதிரிப்புலியூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.