உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  ஆடு திருடிய 2 பேர் கைது

 ஆடு திருடிய 2 பேர் கைது

நடுவீரப்பட்டு: பண்ருட்டி அருகே ஆடு திருடிய இருவரை போலீசார் கைது செய்தனர். கொஞ்சிக்குப்பம், ஐயனார் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார்,56; லாரி டிரைவர். இவர் நேற்று முன்தினம் இரவு வீட்டில் துாங்கிக்கொண்டிருந்தார். அப்போது, நள்ளிரவு 2:00 மணிக்கு அவரது வீட்டின் கொட்டகையிலிருந்து, ஆடு கத்தும் சத்தம் கேட்டது. குமார் மற்றும் அவரது மகன் குபேந்திரன் இருவரும் எழுந்து சென்று பார்த்தபோது, 2 பேர் அங்கிருந்து ஆடுகளை துாக்கிக்கொண்டு ஓடி மாயமாகினர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து 17 வயது சிறுவன் மற்றும், பிரவீன்குமார்,32; ஆகிய இருவரையும் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை