உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  தொடர் மழைக்கு  4 வீடுகள் சேதம்

 தொடர் மழைக்கு  4 வீடுகள் சேதம்

விருத்தாசலம்: விருத்தாசலம் தாலுகாவில் தொடர் மழைக்கு, 4 கூரை வீடுகள் இடிந்து விழுந்து சேதமடைந்தன. டிட்வா புயல் காரணமாக பெய்து வரும் தொடர் மழையால் மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் சிரமமடைந்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் விடிய விடிய பெய்து வரும் மழையால், கூரை வீடுகள் சேதமடைந்தன. அதன்படி, விருத்தாசலம் அடுத்த சின்னப்பரூர் பெரியசாமி மகன் மணிவேல், விஸ்வநாதன் மனைவி லட்சுமி, சாரங்கபாணி மகன் சுந்தர்ராஜன் மற்றும் வி.சாத்தமங்கலம் முனியன் மகன் பாலகிருஷ்ணன் ஆகியோரது வீட்டின் சுவர் இடிந்து விழுந்தன. தகவலறிந்த தாசில்தார் அரவிந்தன் தலைமையிலான வருவாய்த்துறையினர், அவர்களை அங்குள்ள பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை