உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அரசு பஸ் - டிராக்டர் மோதல் டிரைவர் உட்பட 8 பேர் படுகாயம்

அரசு பஸ் - டிராக்டர் மோதல் டிரைவர் உட்பட 8 பேர் படுகாயம்

திண்டிவனம் : திண்டிவனத்தில் அரசு பஸ்சும், டிராக்டரும் மோதிக் கொண்ட விபத்தில் டிரைவர் உள்ளிட்ட 8 பேர் படுகாயமடைந்தனர்.சென்னையில் இருந்து சேலத்திற்கு நேற்று மதியம் 50 பயணிகளுடன் அரசு பஸ் புறப்பட்டது. பஸ்சை தெள்ளார் சங்கர், 49; ஓட்டினார். மாலை 3 மணிக்கு, திண்டிவனம் காவேரிப்பாக்கம் ஏரி அருகே வந்தபோது, எதிரே பாதாள சாக்கடை திட்ட பணிக்கு மண் ஏற்றி வந்த டிராக்டர் மோதியது.இதில், அரசு பஸ் முன்பகுதி நொறுங்கியது. விபத்தில், டிராக்டர் டிரைவர் கொணக்கம்பட்டு உதயகுமார், 35; துாக்கி வீசப்பட்டார். அரசு பஸ் டிரைவர் சங்கர், கண்டக்டர் பிரகாஷ் மற்றும் பயணிகள் உட்பட 8 பேர் படுகாயமடைந்தனர்.திண்டிவனம் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி தலைமையில் போலீசார் விரைந்து சென்று, இடிபாட்டில் சிக்கி படுகாயமடைந்தவர்களை மீட்டு திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆபத்தான நிலையில் இருந்த டிரைவர் சங்கர் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.விபத்து காரணமாக திண்டிவனம் - சென்னை சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதித்தது. விபத்தில் சிக்கிய வாகனங்கள் கிரேன் மூலம் அப்புறப்படுத்தப்பட்டது. திண்டிவனம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை