உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  கனமழையால் வேருடன் விழுந்த புளிய மரம்

 கனமழையால் வேருடன் விழுந்த புளிய மரம்

ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணத்தில் பெய்த கன மழை காரணமாக வேருடன் சாய்ந்த புளிய மரம் வெ ட்டி அகற்றப்பட்டது. ஸ்ரீமுஷ்ணம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் கன மழை பெய்து வருகிறது. இதில், வாணக்கார தெருவில் இருந்த பழமையான புளிய மரம் வேருடன் சாய்ந்து சாலையின் குறுக்கே விழுந்தது. இதனால் அப்பகுதியில் உள்ள இருந்த வயல்களுக்கு செல்ல முடியாமல் விவசாயிகள் அவதியடைந்தனர். தகவலறிந்து ஸ்ரீமுஷ்ணம் பேரூராட்சி பணியாளர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, சாலையின் குறுக்கே விழுந்த புளிய மரத்தை வெட்டி அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ