உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  வடலுாரில் ரயிலில் அடிபட்டு வாலிபர் கால் துண்டானது

 வடலுாரில் ரயிலில் அடிபட்டு வாலிபர் கால் துண்டானது

வடலுார்: ரயிலில் அடிபட்ட வாலிபரின் நிலை குறித்து, ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர் பெங்களூருவில் இருந்து காரைக்கால் செல்லும் ரயில் (எண் 16529), நேற்று மாலை வடலுார் ரயில் நிலையத்தை கடந்து சென்றது. அப்போது தண்டவாளத்தை கடந்த நபர் ஒருவர் ரயிலில் அடிபட்ட நிலையில் மீட்கப்பட்டார். அடிபட்ட நபர் சிதம்பரம் அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். தகவலறிந்த கடலுார் ரயில்வே போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிந்து விசாரித்தனர். அதில் தஞ்சாவூரை சேர்ந்த அசோக்குமார், 44, என்பவர் ரயிலில் அடிபட்டது தெரியவந்தது. சிறிது மனநிலை பாதிக்கப்பட்ட அந்த நபர் சிகிச்சைக்காக நெய்வேலி, இந்திரா நகர் பகுதியில் தங்கி வந்துள்ளார். நேற்று மாலை வடலுாரில் ரயில் தண்டவாளத்தை கடந்த போது ரயிலில் அடிபட்ட அவருக்கு இடது கால் துண்டானது என, ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ