உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின கையெழுத்து இயக்கம்

கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின கையெழுத்து இயக்கம்

கடலுார்: கடலுார் மாவட்டத்தில் தொழிலாளர் நலத்துறை சார்பில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.கடலுார், திருப்பாதிரிப்புலியூர் செயின்ட் ஜோசப் மேல்நிலைப் பள்ளியில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தின கையெழுத்து இயக்கம் நடந்தது. கலெக்டர் அருண் தம்புராஜ் முன்னிலை வகித்தார். அமைச்சர்கள் பன்னீர்செல்வம், ராமச்சந்திரன் ஆகியோர் துவக்கி வைத்தனர்.கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துத் துறை அலுவலர்கள், பணியாளர்கள் கொத்தடிமை தொழிலாளர் ஒழிப்பு தின உறுதிமொழி ஏற்றனர். தொழிலாளர் உதவி ஆய்வாளர்களால் மாவட்டத்தில் கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு குறித்து பதாகைகள் வைத்தும், துண்டு பிரசுரங்கள் வழங்கியும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. கொத்தடிமை தொழிலாளர் முறையை ஒழிப்பதற்கான மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழுவினர், தலைமை குற்றவியல் நீதித்துறை நீதிபதி பிரபாகர் தலைமையில், மேல்பட்டாம்பாக்கம் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் தொழிலாளர்கள் நிலை குறித்து விழப்புணர்வு ஏற்படுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை