உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் நடவடிக்கை

பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் நடவடிக்கை

நெய்வேலி: பள்ளி வாகனங்களை அதிவேகமாக ஓட்டினால் நடவடிக்கை எடுக்கப்படும் என, மோட்டார் வாகன அதிகாரி எச்சரித்துள்ளார்.தமிழ்நாடு நுகர்வோர் உரிமை மற்றும் சாலை பாதுகாப்பு மையம், நெய்வேலி வட்டார போக்குவரத்து அலுவலகம் மற்றும் நெய்வேலி டவுன்ஷிப் போலீஸ் சார்பில், 35வது தேசிய சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. அரசு போக்குவரத்து கழக நெய்வேலி கிளை மேலாளர் பாஸ்கரன் தலைமை தாங்கினார். டவுன்ஷிப் இன்ஸ்பெக்டர் சாகுல் அமீது, சப் இன்ஸ்பெக்டர்கள் கோபால், ஜெயராமன், ஞானசேகரன் முன்னிலை வகித்தனர். ஏட்டு பாலச்சந்திரன் வரவேற்றார்.நெய்வேலி வட்டார போக்குவரத்து இன்ஸ்பெக்டர் பிரான்சிஸ், சாலை விதிகள் குறித்த விழிப்புணர்வு துண்டறிக்கை வழங்கி பேசுகையில், தனியார் பள்ளி வாகனங்கள் அரசு நிர்ணயித்த அளவில் மாணவர்களை ஏற்ற வேண்டும், பள்ளி வாகனங்களை அதிவேகமாக இயக்கக் கூடாது, ஏர் ஹாரன் பயன்படுத்தக் கூடாது, சாலை விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விபத்து ஏற்படுத்தாத டிரைவர்களுக்கு கேடயம் வழங்கப்படும் என, தெரிவித்தார். தமிழ்நாடு நுகர்வோர் உரிமை மற்றும் சாலை பாதுகாப்பு மையத்தின் தலைவர் ஆரோக்கியராஜ், செயலாளர் செந்தில், பள்ளி வாகன ஓட்டுநர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் கலந்து கொண்டனர்.ஏட்டு முத்தையன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி