உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  வீணாகும் குடிநீர் மையம் சீரமைக்க நடவடிக்கை தேவை

 வீணாகும் குடிநீர் மையம் சீரமைக்க நடவடிக்கை தேவை

திட்டக்குடி: மேலுாரில் பாழாகி வரும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் மையத்தை சீரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும். திட்டக்குடி அடுத்த மேலுார் ஊராட்சியில் கிராம மக்களின் குடிநீர் தேவைக்காக, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், 6 லட்சம் ரூபாய் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் மையம் அமைக்கப்பட்டது. ஆனால், குடிநீர் மையம் இதுநாள் வரை கிராம மக்கள் பயன்பாட்டிற்கு வராமல் இயந்திரங்கள், மையம் பாழாவதுடன், அரசு நிதியும் வீணாகிறது. எனவே, பாழாகி வரும் குடிநீர் மையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ