உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக பூஜைகள் துவக்கம்

அங்காளம்மன் கோவில் கும்பாபிஷேக பூஜைகள் துவக்கம்

புவனகிரி : புவனகிரி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேக பூஜைகள் துவங்கியது.புவனகிரியில் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில் அமைந்துள்ளது. அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோவில் கும்பாபிேஷகம் செய்ய புனரமைக்கப்பட்டது. கோவிலில் பரிவார தெய்வங்களுக்கு தனித்தனி சன்னதிகள், கொடி மரம் உள்ளிட்டைவை புதியதாக அமைக்கப்பட்டன. கும்பாபிேஷகம் வரும் 22 ம் தேதி காலை 10:10 மணிக்கு நடக்கிறது. வேளாண் அமைச்சர் பன்னீர்செல்வம் தலைமையிலும், அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு, தொழில் துறை அமைச்சர் கணேசன் ஆகியோர் முன்னிலையில் நடக்கிறது.அதையொட்டி, நேற்று முன்தினம் காலை அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹொமத்துடன் பூஜைகள் துவங்கியது. நேற்று காலை கோ பூஜை, மகாலட்சுமி ேஹாமம், பூர்ணாஹூதி தீபாரதனை நடந்தது. அதற்காக பிரமாண்டமான யாகசாலை அமைக்கப்பட்டுள்ளது. ரத்தினசுப்ரமணியன் தலைமையில் ஏற்பாடுகளை செயல் அலுவலர் சரண்யா மேற்பார்வையில் விழா குழுவினர்கள், அங்காளம்மன் இளைஞர்கள் நற்பணி மன்றத்தினர், ஊஞ்சல் உற்சவ குழுவினர், மயான சூறை குழுவினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை