உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வு ஊர்வலம்

கடலுார்: கடலுார் அடுத்த முள்ளோடை டி.வி.ஆர்., கல்வியியல் கல்லுாரியில், சமூக விழிப்புணர்வு முகாமையொட்டி, எய்ட்ஸ் விழிப்புணர்வு மற்றும் ஊழல் எதிர்ப்பு ஊர்வலம் நடந்தது.டி.வி.ஆர்., கல்வியியல் கல்லுாரி தாளாளர் ரங்கமணி தலைமை தாங்கி, ஊர்வலத்தை துவக்கி வைத்தார். கல்லுாரி முதல்வர் சுகந்தி ஒனாரின் மெர்சலின் ஊர்வலத்தில் நிறைவுரையாற்றினார். பவானி அம்மாள் கல்வி அறக்கட்டளை இயக்குனர் சித்ரா ராஜேஸ்வரி மற்றும் ஹயக்ரீவர் பள்ளி முதல்வர் அலெக்சாண்டர் சிறப்புரையாற்றினார். கல்லுாரி மாணவர்கள், ஆசிரியர்கள் விழிப்புணர்வு பதாகைகள் ஏந்தி ஊர்வலமாக சென்றனர். ஏற்பாடுகளை கல்லுாரி பேராசிரியர்கள் செய்திருந்தனர்.உதவி பேராசிரியர் ஹரிசுதன் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை