உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / துணை தொழிற்தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்

துணை தொழிற்தேர்வு எழுத விண்ணப்பிக்கலாம்

கடலுார் : கைவினைஞர் பயிற்சி திட்டத்தில், தேர்வில் தேர்ச்சி பெறாத பயிற்சியாளர்கள் அகில இந்திய துணை தொழிற்தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.இது குறித்து கலெக்டர் அலுவலக செய்திக்குறிப்பு:கைவினைஞர் பயிற்சித் திட்டத்தின்கீழ், 2017-2019ல் இரண்டாண்டு தொழிற் பிரிவில் சேர்க்கை செய்யப்பட்டு, அனைத்து தகுதி இருந்தும் தேர்வில் கலந்து கொள்ள இயலாதவர்கள் மற்றும் தேர்வில் தேர்ச்சி பெறாத பயிற்சியாளர்களுக்கு அகில இந்திய துணை தொழிற்தேர்வு மார்ச் 2024-ல் (செமஸ்டர் சிஸ்டம் மட்டும்) நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.எனவே, துணைத் தேர்வு தொடர்பாக முன்னாள் பயிற்சியாளர்கள், தாங்கள் படித்த தொழிற் பயிற்சி நிலையங்களை வரும் 15ம் தேதிக்குள் தொடர்பு கொண்டு, சம்பந்தப்பட்ட பாடங்களுக்கான தேர்வுக் கட்டணம் செலுத்தி, இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளலாம்.மேலும், அகில இந்திய துணைத் தொழிற்தேர்வு மார்ச் 2024, குறித்த தகவல்களை, http://skilltraining.tn.gov.in) மற்றும் https://ncvtmis.gov.inஆகிய இணைய தளங்களில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி