உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கடலுார் எம்.பி., தொகுதிக்கு ஒருங்கிணைப்பாளர் நியமனம்

கடலுார் எம்.பி., தொகுதிக்கு ஒருங்கிணைப்பாளர் நியமனம்

காட்டுமன்னார்கோவில் : கடலுார் எம்.பி., தொகுதிக்கு, காங்., ஒருங்கிணைப்பாளராக மணிரத்தினம் நியமிக்கப்பட்டுள்ளார்.எம்.பி., தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில், காங்., சார்பில் ஒவ்வொரு தொகுதிக்கும் ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், கடலூர் எம்.பி., தொகுதிக்கு, அகில இந்திய காங்., உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு காங்., மாநிலத் துணைத் தலைவர் மணிரத்தினம், ஒருங்கிணைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். சோனியா மற்றும் ராகுல் ஒப்புதலின்பேரில், அகில இந்திய தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே நியமித்துள்ளார். பொதுச் செயலாளர் வேணுகோபால் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை