உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  ஆருத்ரா தரிசன விழா: மதுக்கடைகளை மூட உத்தரவு  

 ஆருத்ரா தரிசன விழா: மதுக்கடைகளை மூட உத்தரவு  

கடலுார்: சிதம்பரம் ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு மதுபானக் கடைகளை மூட வேண்டுமென, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் உத்தரவிட்டுள்ளார். அவரது செய்திக்குறிப்பு: சிதம்பரம் பஸ் ஸ்டாண்ட் அருகில் உள்ள கடை எண்- 2404 மற்றும் சிதம்பரம் ரயில்வே பீடர் ரோட்டில் உள்ள மதுபான கடை எண்-2522 என, 2 மதுபானக் கடைகளையும் ஆருத்ரா தேர் மற்றும் தரிசன விழா நடக்கும் நாட்களான வரும் 2ம் மற்றும் 3 ஆகிய தேதகளில் மூடப்பட வேண்டும். இந்த கடைகள் மூடப்படுவதை டாஸ்மாக் மூலம் நடத்தப்படும் சில்லரை மதுபான கடைகளின் மேற் பார்வையாளர்கள் உறுதி செய்து கொள்ள வேண்டும். இதனை மீறி எவரேனும் கடைகள் மற்றும் மது அருந்தும் கூடங்களில் மதுபானங்கள் விற்பனை செய்தல் அல்லது திறந்து வைத்திருந்தால் கடை மேற்பார்வையாளர் பெயரில் குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ