உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / உதவி வேளாண் அலுவலர் துாக்கு போட்டு தற்கொலை

உதவி வேளாண் அலுவலர் துாக்கு போட்டு தற்கொலை

திருக்கோவிலுார் : மணலுார்பேட்டையில், திருமணமான இரண்டே மாதத்தில் உதவி வேளாண் அலுவலர் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.மணலுார்பேட்டையை சேர்ந்தவர் வெங்கடகிருஷ்ணன், 47; விழுப்புரம் மாவட்டம், மணம்பூண்டியில் உள்ள முகையூர் வட்டார வேளாண் அலுவலகத்தில் உதவி வேளாண் அலுவலராக பணிபுரிந்து வந்தார். இவரது மனைவி தனலட்சுமி, 25; திருமணம் ஆகி இரண்டு மாதங்கள் ஆகிறது.நீண்ட நாட்களாக வெங்கடகிருஷ்ணன் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வீட்டின் முதல் மாடியில் உள்ள அறைக்கு துாங்கச் சென்றவர், நேற்று காலை வெகுநேரமாகியும் கதவை திறக்கவில்லை. சந்தேகம் அடைந்த உறவினர்கள் கதவைத் திறந்து பார்த்தபோது, துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.இது குறித்து அவரது அண்ணன் ஏழுமலை கொடுத்த புகாரின் பேரில் மணலுார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை