உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  பெண் குழந்தைகளுக்கு விருது விண்ணப்பங்கள் வரவேற்பு விண்ணப்பங்கள் வரவேற்பு 

 பெண் குழந்தைகளுக்கு விருது விண்ணப்பங்கள் வரவேற்பு விண்ணப்பங்கள் வரவேற்பு 

கடலுார்: கடலுார் மாவட்ட பெண் குழந்தைகளுக்கு அரசு விருது வழங்குவதற்கான இணையதள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என, கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார் கூறினார். அவரது செய்திக்குறிப்பு: தமிழக அரசால் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் பெண் குழந்தைகளின் கல்விக்கு உதவுதல், பெண் குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, பெண் குழந்தை திருமணங்கள் தடுத்தல் மற்றும் தவிர்த்தல் ஆகியவற்றிற்கு தீர்வு காண ஓவியங்கள், கவிதைகள் மற்றும் கட்டுரைகள் மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்தியிருத்தல், வேறு ஏதாவது வகையில் சிறந்த செயல்கள் மற்றும் தனித்துவமான சாதனைகள் செய்திருத்தல் போன்றவற்றில் வீர தீர செயல் புரிந்து வரும், 13 வயது முதல், 18 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகளை சிறப்பிக்கும் வகையில், ஆண்டுதோறும் சிறந்த பெண் குழந்தை ஒருவருக்கு தேசிய பெண் குழந்தை தினமான ஜன., 24ம் தேதி மாநில விருது, பாராட்டு பத்திரம், 1 லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கப் படுகிறது. அதன்படி, கடலுார் மாவட்ட பெண் குழந்தைகளிடம் இருந்து இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன. விருதுபெற தகுதியானவர்கள் (https://awards.tn.gov.in) என்ற இணையதளத்தில் வரும் 20ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும். விருதிற்கான விண்ணப்பங்கள் தலைமை ஆசிரியர் மற்றும் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், காவல்துறை, தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட சம்மந்தப்பட்ட அலுவலர்கள் வாயிலாக உரிய முன் மொழிவுகளை மாவட்ட சமூக நல அலுவலர், அரசு சேவை இல்ல வளாகம், நெல்லிக்குப்பம், மெயின்ரோடு, கடலுார் என்ற முகவரியில் வரும் 20ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி