| ADDED : நவ 28, 2025 05:05 AM
விருத்தாசலம்: விருத்தாசலத்தில் பாங்க் ஆப் பரோடாவின் 8,451வது கிளை துவக்க விழா நேற்று நடந்தது. இந்தியாவின் முன்னோடி வங்கியான பாங்க் ஆப் பரோடா, நகரங்கள் மட்டுமின்றி, கிராமங்களில் தனது கிளைகளை தொடர்ந்து விரிவுப் படுத்தி வருகிறது. சுய உதவிக்குழு, சிறு குறு விவசாயிகளுக்கான கடனுதவி வழங்கி தொழில் அபிவிருத்திக்கு கைகொடுத்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக, புதுச்சேரி பிராந்தியம், கடலுார் மாவட்டம், விருத்தாசலத்தில், 49 வது புதிய கிளை நிறுவப்பட்டுள்ளது. இந்த கிளையை பாங்க் ஆப் பரோடா வங்கியின் சென்னை மண்டல தலைவர் சுரேஷ், புதுச்சேரி பிராந்திய தலைவர் பிரவீன் குமார் ராகுல் ஆகியோர் துவக்கி வைத்து சிறப்புரையாற்றினர். பாங்க் ஆப் பரோடா வங்கியில், வாடிக்கையாளர்களின் நிதி தேவைகளை பூர்த்தி செய்ய, தங்க நகைகளுக்கு குறைந்த வட்டியில் பணம், வீட்டுக்கடன், கார் மற்றும் இருசக்கர வாகன கடன்கள் வழங்கபடுகின்றன. இதனைத்தொடர்ந்து சேமிப்பு கணக்கு, நடப்பு கணக்கு, டிஜிட்டல் கணக்கு, வைப்பு நிதி, லாக்கர் வசதி, இன்டர் நெட் பேங்கிங், மொபைல் பேங்கிங், வாட்ஸ் ஆப் பேங்கிங் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பாங்க் ஆப் பரோடா வங்கியின் சிறப்புகள் மற்றும் கடனுதவி திட்டங்கள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. சிறு குறு தொழில் நிறுவன உரிமையாளர்களுக்கு கடன் உதவிகள் வழங்கப்பட்டன. இதில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். முன்னதாக, துவக்க விழாவில் பங்கேற்றவர்களை விருத்தாசலம் வங்கியின் கிளை மேலாளர் விக்னேஷ் வரவேற்றார்.