உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வட இந்தியாவில் பா.ஜ.,விற்கு பெரிய ஆதரவு உள்ளது ம.ம.க., தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி

வட இந்தியாவில் பா.ஜ.,விற்கு பெரிய ஆதரவு உள்ளது ம.ம.க., தலைவர் ஜவாஹிருல்லா பேட்டி

விருத்தாசலம்: ''இந்தியாவின் பொருளாதாரம் கடுமையான சூழலில் உள்ளது'' என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா கூறினார்.கடலுார் மாவட்டம்,விருத்தாசலத்தில் அவர், நிருபர்களிடம் கூறியதாவது;தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது வாடிக்கையாக உள்ளது. இதுகுறித்து உருப்படியான நடவடிக்கையை மத்திய அரசு எடுப்பதில்லை.சமீபத்தில் கைது செய்யப்பட்ட 23 மீனவர்களில் 20 பேர் மட்டும் விடுவிக்கப்பட்டனர். மூன்று பேருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு மீனவருக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.கடலுார் - சின்னசேலம் வி.கூட்டுரோடு வரை நெடுஞ்சாலை பணிகள் இன்னும் முழுமையாக முடியவில்லை. ஆனால் பொன்னாலகரம் பகுதியில் சுங்கச்சாவடி அமைத்து கட்டணம் வசூல் செய்யப்படுகிறது. விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் போதிய மருத்துவர்கள் இல்லை. காலி பணியிடங்களை அரசு நிரப்ப வேண்டும்.இந்தியாவின் பொருளாதாரம் கடுமையான சூழலில் உள்ளது. பொருளாதார சவால்களை சந்திக்கக்கூடிய நிலையில் தமிழக அரசு உள்ளது.பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தமிழக அரசியலில் ஒரு காமெடியனாக மாறிவிட்டார். வரும் லோக்சபா தேர் தலில் எங்களுக்கு ஒரு தொகுதி வழங்க வேண்டும்.வட இந்தியாவில் பா.ஜ., வுக்கு மிகப்பெரிய ஆதரவு உள்ளது. பா.ஜ., வுக்கு சவாலான பகுதிகள் தென் மாநிலங்கள் தான்.கடந்த ஓராண்டுக்கு மேலாக போராடியும் கோரிக்கைகளை மத்திய பா.ஜ., அரசு நிறைவேற்றாததால் தற்போது டில்லியில் விவசாயிகள் போராட்டத்தை துவங்கி உள்ளனர்.இவ்வாறு அவர், கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை