உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / என்.எல்.சி.,யில் 26ல் முற்றுகை போராட்டம்; ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் அறிவிப்பு

என்.எல்.சி.,யில் 26ல் முற்றுகை போராட்டம்; ஒப்பந்த தொழிலாளர்கள் சங்கம் அறிவிப்பு

கடலுார் : நெய்வேலி என்.எல்.சி., ஒப்பந்த தொழிலாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் 26ம் தேதி கருப்புக் கொடி ஏந்தி தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த உள்ளனர்.இதுகுறித்து கடலுாரில், என்.எல்.சி., ஜீவா ஒப்பந்த தொழிலாளர்கள் சங்க சிறப்பு செயலாளர் சேகர் கூறியதாவது:கடலுார் மாவட்டம், நெய்வேலி என்.எல்.சி., நிறுவனத்தில் பணிபுரியும் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஒப்பந்தம் மற்றும் சொசைட்டி தொழிலாளர்கள், சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின்படி பணி நிரந்தரம் செய்யக் கோரி போராடி வருகின்றனர்.சமீபத்தில் நடந்த வேலை நிறுத்தத்தின்போது, 8 வாரங்களில் தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டுமென, சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. ஆனால், இதுவரை நிறைவேற்றவில்லை. சம வேலைக்கு சம ஊதியம் என்ற சட்டத்தை என்.எல்.சி., மதிக்கவில்லை. 2 ஆண்டுகளில் 480 நாள் பணி முடித்தவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்ற சட்டமும் அங்கு அமலாகவில்லை.தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு செவி சாய்க்காததால், வரும் 26ம் தேதி கருப்புக் கொடி ஏந்தி குடும்பத்தினருடன் என்.எல்.சி., தலைமை அலுவலகத்தில் முற்றுகை போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், லோக்சபா தேர்தலை புறக்கணிக்கவும் முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து ஜனாதிபதி, பிரதமர், தலைமை தேர்தல் ஆணையர், சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதிக்கு மனு அளிக்கப்பட உள்ளது. என்.எல்.சி.,யில் என்ன நடக்கிறது என்றே அமைச்சர் கணேசனுக்கு தெரியவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.சங்கத் தலைவர் அந்தோணி செல்வராஜ், பொதுச் செயலாளர் செல்வமணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ