உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கோவில் இடத்தை பிளாட் போட்டு விற்பனை செய்ய முயற்சி: அதிகாரிகள் மீட்டனர்

கோவில் இடத்தை பிளாட் போட்டு விற்பனை செய்ய முயற்சி: அதிகாரிகள் மீட்டனர்

முதுநகர் : கோவில் இடத்தை பிளாட் போட்டு விற்பனை செய்ய முயன்றதை அறநிலையத் துறை அதிகாரிகள் தடுத்து நிலத்தை மீட்டனர். கடலூர் முதுநகர், செட்டித் தெருவில் காசி விஸ்வநாதர் கோவில் அறநிலையத் துறை கட்டுபாட்டில் உள்ளது. இக்கோவிலுக்கு முதுநகர், வசந்தராயன் பாளையம் செல்லும் வழியில் 1.80 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த இடத்தை தனி நபர் ஒருவர் செம்மண் கொட்டி, பிளாட் பிரித்து விற்பனை செய்ய முயன்றார். இது குறித்து தகவலறிந்த அறநிலையத்துறை உதவி ஆணையர் ஜெகநாதன், செயல் அலுவலர் நாகராஜன் மற்றும் அதிகாரிகள் விரைந்து சென்று போலீசார் உதவியுடன் கோவில் இடத்தை மீட்டனர். பின்னர் 'கோவிலுக்கு சொந்தமான இடம், இந்த இடத்தை ஆக்கிரமிக்க முயன்றால் நடவடிக்கை எடுக்கப்படும்' என எச்சரிக்கை பலகை வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி