| ADDED : நவ 21, 2025 05:45 AM
பண்ருட்டி: பண்ருட்டியில் இருகோஷ்டியினர் தாக்கி கொண்டது குறித்து, 6 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். பண்ருட்டி, கும்பகோணம் சாலை, தேநீர் கடை முன்பு, கடந்த 18 ம்தேதி ரயில்வே பகுதியை சேர்ந்தவர்களும், செட்டிப்பட்டறை பகுதியை சேர்ந்தவர்களும் முன்விரோதம் காரணமாக ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் ரயில்வே பகுதியை சேர்ந்த விஷ்ணு ராஜ் மற்றும் விஜய் இருவரும் காயமடைந்து பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து பண்ருட்டி ரயில்வே காலனி பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் விஜய்,25; கொடுத்த புகாரின் பேரில், அம்பேத்கர் நகரை சேர்ந்த தினேஷ்,39; கவுதம்,22; வீனஸ்,26; தமிழ் குமரன்,24; ஆகிய 4பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல, பண்ருட்டி அம்பேத்கர் நகர் ராஜ் மகன் தினேஷ்,39; கொடுத்த புகாரின்பேரில் ரயில்வே பகுதியை சேர்ந்த விஜய்,26; விஷ்ணுராஜ்,28; ஆகிய இருவர் மீதும் வழக்குபதிந்தனர். இருதரப்பில் 6பேர் மீது வழக்குபதிந்து விசாரித்து வருகின்றனர்.