டாஸ்மாக் மதுபாட்டில் விற்ற மூவர் மீது வழக்கு
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே டாஸ்மாக் மதுபாட்டில் விற்ற மூவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். கருவேப்பிலங்குறிச்சி சப் இன்ஸ்பெக்டர் பிரகஸ்பதி தலைமையிலான போலீசார் நேற்று ராஜேந்திரபட்டிணம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அப்போது, அதேபகுதியை சேர்ந்த சதீஷ்குமார், 30; ராஜாமணி, 70; பவுன்ராஜ் ஆகியோர் கள்ளத்தனமாக டாஸ்மாக் மதுபாட்டில் விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து, கருவேப்பிலங்குறிச்சி போலீசார் 3 பேர் மீது வழக்குப் பதிந்து, சதீஷ்குமார், பவுன்ராஜை கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 21 குவாட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.