உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  சக்ராலயா மோட்டார்ஸ் புதிய கிளை கோட்டக்குப்பத்தில் திறப்பு

 சக்ராலயா மோட்டார்ஸ் புதிய கிளை கோட்டக்குப்பத்தில் திறப்பு

கடலுார்: புதுச்சேரி, கோட்டக்குப்பத்தில் சக்ராலயா மோட்டார்ஸ் இரண்டாவது கிளையை, முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார். கடலுார், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி மாநிலத்தில் டாடா மோட்டார்ஸின் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனமாக சக்ராலயாமோட்டார்ஸ் இயங்கி வருகிறது. இங்கு வாகனங்கள் விற்பனை செய்யப்படுவதுடன், சர்வீஸ் சென்டரும் செயல்படுகிறது. புதுச்சேரிஅடுத்த கோட்டக்குப்பத்தில் சக்ராலயா மோட்டார்ஸ் இரண்டாவது கிளை திறப்பு விழா நேற்று நடந்தது. சிறப்பு விருந்தினர் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, புதிய கிளையை திறந்து வைத்து, குத்துவிளக்கேற்றி, முதல் விற்பனையை துவக்கி வைத்தார். ஜி.ஆர்.கே.,குழும நிர்வாக இயக்குனர்துரைராஜ், இயக்குனர் கோமதி துரைராஜ் வரவேற்றனர். செந்தில்குமார் எம்.எல்.ஏ., கோட்டக்குப்பம் நகராட்சி சேர்மன் ஜெயமூர்த்தி, கணேசன் பஸ் உரிமையாளர் சதீஷ்குமார், யுவராஜ், எச்.டி.எப்.சி.,வங்கி (பைனான்ஸ்) ஹாஜா, ஆக்சிஸ் வங்கி (இன்சூரன்ஸ்) சந்தோஷ், நில உரிமையாளர் சுவாமிநாதன் வாழ்த்தி பேசினர். நிர்வாக இயக்குனர் துரைராஜ் கூறுகையில், கோட்டக்குப்பம் சக்ராலயா மோட்டார்சில் டாடா மோட்டார்ஸ் வாகனங்கள் விற்பனை மற்றும் சர்வீஸ் சென்டர் உள்ளது. புதிய வாகனங்கள் உடனுக்குடன் டெலிவரிசெய்யப்படுகிறது. வாகனங்கள் உடனுக்குடன் சர்வீஸ் செய்து தரப்படும்' என்றார். டாடா மோட்டார்ஸ் பேசஞ்சர் வாகன மண்டல மேலாளர் அப்துல் ரகுமான், நேஷனல் சேல்ஸ் தலைமை அதிகாரி ரித்தேஷ்வசிஷ்ட், இன்ஸ்பெக்டர் தேவநாதன், மனிதவள மேம்பாட்டு பொதுமேலாளர் ஜெயக்குமார், தலைமை இயக்க அதிகாரி ரவிக்குமார், கார்த்திக், தலைமை நிர்வாகஅதிகாரி விக்னேஷ், பொது மேலாளர் இளைய பெருமாள், சந்தோஷ், சோழன், ரவி, நிர்வாக அதிகாரி குருபிரசாத், விற்பனை மேலாளர் ரேண்டன்மதன்ராஜ், டாடா மற்றும் மகேந்திரா வாகன பொது மேலாளர்கள், விற்பனை மேலாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை