உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  வீனஸ் பள்ளியில் குழந்தைகள் தின விழா

 வீனஸ் பள்ளியில் குழந்தைகள் தின விழா

சிதம்பரம்: சிதம்பரம் வீனஸ் குழும பள்ளிகளில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. வீனஸ் சி.பி.எஸ்.இ., பள்ளியில் நடந்த விழாவிற்கு, பள்ளி சேர்மன் குமார் தலைமை தாங்கினார். இயக்குனர் முரளிகுமார் பங்கேற்று, குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவதின் நோக்கம் குறித்து பேசினார். முன்னதாக, நேரு படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. முதல்வர் ராதிகா பள்ளி மாணவர்களுக்கு இனிப்புகள் வழங்கினார். சிதம்பரம் தில்லை நகர் வீனஸ் பள்ளியில் நடந்த நிகழ்ச்சிக்கு பள்ளி தாளாளர் ரூபியாள்ராணி தலைமை தாங்கினார். வீனஸ் குழும தலைவர் குமார் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். நிர்வாக இயக்குநர் அருண், பள்ளித் தலைவர் டாக்டர் லியோனா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். குழந்தைகள் தின விழாவையொட்டி நடத்தப்பட்ட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி முதல்வர் நரேந்திரன்,நிர்வாக அலுவலர் ரூபிகிரேஸ் பொனிகலா நிகழ்ச்சி ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை