உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மாநில கபடிப் போட்டிக்கு கடலூரில் வீரர்கள் தேர்வு

மாநில கபடிப் போட்டிக்கு கடலூரில் வீரர்கள் தேர்வு

கடலூர் : மாநில அளவிலான கபடிப் போட்டிக்கு வீரர்கள் தேர்வு கடலூரில் நடந்தது. மாநில அமெச்சூர் கபடிக் கழகம் சார்பில் இளையோர் ஆண்களுக்கான 38வது சாம்பியன்ஷிப் கபடிப் போட்டி ஈரோடு மாவட்டத்தில் வரும் 16ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடக்கிறது. இப்போட்டியில் கடலூர் மாவட்டம் சார்பில் பங்கேற்கும் வீரர்கள் தேர்வு மஞ்சக்குப்பம் செயின்ட் ஜோசப் மேல் நிலைப் பள்ளியில் நேற்று நடந்தது. கபடிக் கழக மாநில துணைத் தலைவர் வேலவன் துவக்கி வைத்தார். மாவட்ட செயலர் ராமமூர்த்தி முன்னிலை வகித்தார். உடற்கல்வி ஆசிரியர்கள் நடராஜன், புஷ்பராஜ் மற்றும் வீரர் கணேசன் ஆகியோர் வீரர்களை தேர்வு செய்தனர். பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 50 வீரர்கள் பங்கேற்றனர். இவர்களில் பரணிதரன், பிரபு, ராஜேஷ், சதீஷ், ரஞ்சித் குமார், அருள்பாண்டியன், நரேஷ்குமார், ரமேஷ், கார்த்தி, கோடீஸ்வரன், மாயவேல், திலீபன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். இவர்களுக்கு ஒரு வாரம் பயிற்சி அளிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை