| ADDED : ஜூலை 31, 2011 03:23 AM
கடலூர் : அ.தி.மு.க., அரசை கண்டித்து தி.மு.க., சார்பில் நாளை (1ம் தேதி)
நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் திரளாக பங்கேற்பது என தி.மு.க., வழக் கறிஞர் அணி
முடிவு செய்துள்ளது.கடலூர் மாவட்ட தி.மு.க., வழக்கறிஞர் அணி ஆலோசனைக்
கூட்டம் கடலூரில் நடந்தது. மாவட்ட செயலர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார்.
வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சிவராஜ், பக்கிரி, சக்ரவர்த்தி, பாரி
இப்ராகிம், ராதாகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். ராதா வரவேற்றார்.கூட்டத்தில்
நகர செயலர் தங்கராசு, அவைத் தலைவர் நாராயணன், இளைஞரணி ராஜா, கவுன்சிலர்கள்
தமிழரசன், பூங்காவனம், வக்கீல்கள் சுந்தர், ராம்சிங், சக்திவேல் உட்பட
பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில் அ.தி. மு.க., அரசை கண்டித்து கடலூரில்
கலெக்டர் அலுவலகம் முன் நாளை (1ம் தேதி) நடக்கும் ஆர்ப்பாட்டத்தில்
வக்கீல்கள் திரளாக கலந்து கொள்வது. தி.மு.க.,வினர் மீது போடப்படும் பொய்
வழக்குகளை சட்ட ரீதியாக சந்திப்பது. நீதி மன்ற வழக்கறிஞர் குழுக்களை
அமைப்பது. அவர்களுக்கு சட்ட பாதுகாப்பு அளிப்பது எனவும், சமச்சீர் கல்வியை
இந்த ஆண்டே அமல் படுத்த வேண்டும் என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.