உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கொலை வழக்கு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

கொலை வழக்கு குற்றவாளி குண்டர் சட்டத்தில் கைது

கடலூர் : புவனகிரியைச் சேர்ந்த ரவுடி குண்டர் சட்டத்திலும், கடலூரைச் சேர்ந்த பெண் சாராய வியாபாரி தடுப்புக் காவல் சட்டத்திலும் நேற்று கைது செய்யப்பட்டனர். தமிழக முதல்வராக பொறுப்பேற்ற ஜெயலலிதா, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு பாதுகாக்க முன்னுரிமை அளிக்கப்படும் என்றார். அதன்படியே மாநிலம் முழுவதும் ரவுடிகள் குண்டர் தடுப்புக் காவல் சட்டத்திலும், சாராய வியாபாரிகள் தடுப்பு காவல் சட்டத்திலும் கைது செய்யப்பட்டு வருகின்றனர். அதன்படி கடலூர் மாவட்டத்தில் புவனகிரி பகுதியில் தொடர்ந்து கொலை, கொலை முயற்சி மற்றும் வழிப்பறி உள்ளிட்ட குற்ற செயலில் ஈடுபட்டு வந்த பூதவராயன்பேட்டை ஜெயபால் மகன் ராகேஷ்கண்ணா என்கிற ராஜா, 31; என்பவரின் செயலை தடுக்கும் பொருட்டு அவரை குண்டர் தடுப்பு சட்டத்திலும், கடலூர் பகுதியில் தொடர்ந்து சாராயம் விற்று வந்த குறவன்பாளையம் தில்லைகோவிந்தன் மனைவி ராணி என்கிற சின்னபொண்ணு, 42; என்பவரை தடுப்புக் காவல் சட்டத்தில் கைது செய்யுமாறு கலெக்டருக்கு எஸ்.பி., பகலவன் பரிந்துரை செய்தார்.அதனையேற்ற கலெக்டர் அமுதவல்லி, பூதவராயன்பேட்டையை சேர்ந்த ரவுடி ராகேஷ்கண்ணா என்கிற ராஜாவை குண்டர் தடுப்பு சட்டத்திலும், சாராய வியாபாரி ராணி என்கிற சின்னபொண்ணுவை தடுப்புக்காவல் சட்டத்திலும் கைது செய்ய நேற்று உத்தரவிட்டார். அதனைத் தொடர்ந்து ராகேஷ்கண்ணாவை கடலூர் மத்திய சிறையிலும், ராணி வேலூர் மகளிர் சிறையிலும் அடைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை