| ADDED : ஆக 19, 2011 03:09 AM
காட்டுமன்னார்கோவில்:காட்டுமன்னார்கோவில் எம்.ஆர்.கே., பொறியியல்
கல்லூரியில் மாணவர்கள் கூட்டமைப்பு துவக்க விழா நடந்தது. கல்லூரி சேர்மன்
கதிரவன் தலைமை தாங்கி கூட்டமைப்பை துவக்கி வைத்தார். 4 நாட்கள் நடைபெறும்
மாணவர்கள் கலந்தாய்விற்கு கல்லூரியில் பயிலும் சிவில், கம்ப்யூட்டர்
சயின்ஸ், எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன், எலக்ட்ரிக்கல் அண்டு எலக்ட்ரானிக்ஸ்,
மெக்கானிக்கல் பிரிவு மாணவர்கள் பங்கேற்கும் கலந்தாய்வு கூட்டம்
நடைபெறுகிறது.முதல் நாளான நேற்று எலக்ட்ரானிக் கம்யூனிகேஷன், எலக்ட்ரிக்கல்
அண்டு எலக்ரானிக்கல் மாணவர்கள் பங்கேற்ற கலந்துரையாடல் நடைபெற்றது.
அண்ணாமலைப் பல்கலைக்கழக துறைத் தலைவர் மற்றும் பேராசிரியர் வேலுசாமி
மாணவர்களிடம் பேசினார். இதில் மாணர்களுக்கு அறிவுத்திறன் மேம்பாடு,
மாணவர்களின் நல்லுறவு, தொலைநோக்கு பார்வை, தனித்திறனை வளர்த்து கொள்ளும்
வழிமுறைகள் உள்ளிட்டவைகள் குறித்து மாணவர்களுக்கு
எடுத்துரைத்தார்.தொடர்ந்து 22ம் தேதி வரை தினமும் அந்தந்த பிரிவு
மாணவர்களுக்கு கலந்துரையாடல் நடைபெற உள்ளது. இன்று திருச்சி அண்ணா
தொழில்நுட்ப கல்லூரி உதவி பேராசிரியர் ராமச்சந்திரன் கம்ப்யூட்டர் சயின்ஸ்
மாணவர்களுக்கும், நாளை கட்டுமானத்துறை சிவில் தலைவர் முருகப்பன் சிவில்
மாணவர்களுக்கும், 22ம் தேதி மெக்கானிக் பிரிவு இயக்குனர் பேராசிரியர்
அய்யாக்கண்ணு மெக்கானிக்கல் மாணவர்களிடத்திலும் கலந்துரையாடல் நடக்கிறது.