உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கிள்ளையில் ஆசிரியர்களுக்குகற்பித்தல் பயிற்சி முகாம்

கிள்ளையில் ஆசிரியர்களுக்குகற்பித்தல் பயிற்சி முகாம்

கிள்ளை:அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பயிற்சி முகாம் நடந்தது.கிள்ளை கருத்தாய்வு மையத்தில் 17 பள்ளிகளைச் சேர்ந்த 32 ஆசிரியர்களுக்கு ஆசிரியர் பயிற்றுனர் மாறன், பிச்சாவரம் மையத்தில் 19 பள்ளிகளைச் சேர்ந்த 32 ஆசிரியர்களுக்கு பாலமுருகன், கொத்தங்குடியில் 16 பள்ளிகளைச் சேர்ந்த 31 ஆசிரியர்களுக்கு பாஸ்கர், தில்லைவிடங்கனில் 12 நடுநிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 65 பட்டதாரி ஆசிரியர்களுக்கு ஆசிரியர் பயிற்றுனர் பாலசுப்ரமணியன் ஆகியோர் புதிய பாடத்திட்டத்தில் ஏ.பி.எல்., முறையில் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கும் முறை குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சியளித்தனர்.முகாமில் மேற்பார்வையாளர் சிவசண்முகம் ஆலோசனை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை