உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / அறநிலையத் துறை அதிகாரி கட்டுப்பாட்டில் வெங்கட்டராயர் பெருமாள்கோவில்

அறநிலையத் துறை அதிகாரி கட்டுப்பாட்டில் வெங்கட்டராயர் பெருமாள்கோவில்

நெல்லிக்குப்பம் : மேல்பட்டாம்பாக்கம் பெருமாள் கோவிலில் 12 ஆண்டுகளுக்குப் பிறகு அறநிலையத்துறை அதிகாரி கட்டுப்பாட்டின் கீழ் வந்தது.நெல்லிக்குப்பம் அடுத்த மேல்பட்டாம்பாக்கத்தில் பழமையான வேட்டை வெங்கட்டராயர் பெருமாள் கோவில் பராமரிப்பின்றி பாழடைந்து இருந்தது. பட்டாச்சாரியாருக்கு சம்பளம் வழங்காததால் கோவில் மூடிக் கிடந்தது.கடந்த 12 ஆண்டுகளுக்கு முன் அறங்காவலர்களாக நியமிக்கப்பட்ட சிலர் பதவிக்காலம் முடிந்தும் பதவி விலகாமல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து பதவியில் இருந்து வந்தனர்.வழக்கு நிலுவையில் இருந்ததால் பொதுமக்களால் திருப்பணி செய்ய முடியவில்லை. அதிகாரிகளும் நடவடிக்கை எடுக்க முடியாமல் இருந்தனர்.இந்நிலையில் அறநிலையத்துறை சார்பில் தக்கார் நியமித்து கோவில் திருப்பணியை துவக்க கோர்ட் அறிவுரை வழங்கியது.கடலூர் வரதராஜ பெருமாள் கோவில் செயல் அலுவலர் வெங்கடேசன் இக்கோவிலின் தக்காராக நியமிக்கப்பட்டார். உதவி ஆணையர் ஜெகன்நாதன், ஆய்வர் பாலகிருஷ்ணன் முன்னிலையில் தக்காராக வெங்கடேசன் பொறுப்பேற்றதைத் தொடர்ந்துகோவில் அதிகாரிகளின் கட்டுப்பாட்டின் கீழ்வந்தது. அதனையடுத்து கோவில் அறநிலையத்துறை அதிகாரிகளின் கட்டுப்பாட்டில் வந்ததற்கான நோட்டீசை கோவிலில் ஒட்டினர். ராமலிங்கம், ஜனார்த்தனம், சுதர்சனம் பட்டாச்சாரியார் உடனிருந்தனர். விரைவில் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டுமென அ.தி.மு.க., நகர செயலர் அர்ச்சுனன் அதிகாரிகளிடம் நன்கொடை அளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை