உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மின்கசிவால் தீ விபத்து8 வீடுகள் சாம்பல்

மின்கசிவால் தீ விபத்து8 வீடுகள் சாம்பல்

திட்டக்குடி:மின் கசிவால் ஏற்பட்ட தீவிபத்தில் 8 வீடுகள் எரிந்து 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன.திட்டக்குடி அடுத்த பெண்ணாடம் சிவன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் மணிகண்டன். இவர் நேற்று முன்தினம் குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்தார்.நள்ளிரவில் திடீரென வீடு தீப்பிடித்து அருகில் உள்ள வீடுகளுக்கும் பரவியதில் சாவித்திரி, செல்வி, தங்கராசு, ஷேக்பாஷா, ஷேக் தாவூத், சொர்ணாம்பாள், கலைச்செல்வி ஆகியோர் வீடுகளும் தீப்பிடித்து எரிந்தது.திட்டக்குடி தீயணைப்புப் படையினர் விரைந்து சென்று 5 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இதில் 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருப்பது தெரியவந்தது.வருவாய் ஆய்வாளர் விருத்தகிரி, வி.ஏ.ஓ., ராமச்சந்திரன், கிராம ஊழியர் சிங்காரவேல் நேரில் சென்று நிவாரணப் பணி களை மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி