உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மண்சோறு சாப்பிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்

மண்சோறு சாப்பிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்

விருத்தாசலம் : விருத்தகிரீஸ்வரர் கோவிலில், சமயபுரம் மாரியம்மன் கோவில் பக்தர்கள் மண்சோறு சாப்பிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.விருத்தாசலம் நாச்சியார்பேட்டை அருகே எருமனுார் புறவழிச்சாலையில் ஜெகமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் தை மாதம் பக்தர்கள் சமயபுரம் மாரியம்மனுக்கு மாலை அணிந்து பாதயாத்திரை செல்வது வழக்கம். அந்த வகையில், கடந்த 19ம் தேதி பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து வருகின்றனர். அவர்கள் நேற்று, விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில், மண்சோறு சாப்பிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.முன்னதாக, ஜெகமுத்து மாரியம்மனுக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன் உள்ளிட்ட பல்வேறு திரவிய பொருட்களால் அபிஷேக ஆராதனைகள் நடந்தது. வரும் 27ம் தேதி பக்தர்கள் இருமுடி கட்டி, வரும் 28ம் தேதி சமயபுரம் கோவில் செல்ல உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ