உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கோவில் திருவிழாவில் தகராறு 19 பேர் மீது வழக்குப்பதிவு

கோவில் திருவிழாவில் தகராறு 19 பேர் மீது வழக்குப்பதிவு

பரங்கிப்பேட்டை : கோவில் திருவிழாவையொட்டி இரு கிராமத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் நான்கு பேர் காயமடைந்தனர். பரங்கிப்பேட்டை அடுத்த சின்னூர் தெற்கு பகுதி வெள்ளரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் முடிந்து மண்டலாபிஷேகத்தையொட்டி நேற்று முன்தினம் இரவு பாட்டு கச்சேரி நடந்தது. அப்போது புதுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ், முத்தமிழ்ச்செல்வன், கணேஷ் ஆகியோர் சத்தம்போட்டு கத்தினர். இதனை சின்னூர் தெற்கு கிராமத்தினர் தட்டிகேட்டதால் தகராறு இரு தரப்பினரும் மோதிக்கொண்டனர். இதில் ராஜேஷ், முத்தமிழ்ச்செல்வன், கணேஷ், சீனுவாசன் ஆகியோர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து இரு தரப்பினரும் தனித்தனியே கொடுத்த புகாரின் பேரில் பரங்கிப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து சின்னூர் தெற்கு பகுதியைச் சேர்ந்த செல்வம், கணேசன், தட்சணாமூர்த்தி, புதுக்குப்பத்தைச் சேர்ந்த முரளி, சுரேஷ், கனகு, தமிழ் உட்பட 19 பேரை தேடிவருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை