உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / தி.மு.க., செயற்குழு கூட்டம் அமைச்சர் அழைப்பு

தி.மு.க., செயற்குழு கூட்டம் அமைச்சர் அழைப்பு

சிறுபாக்கம்: காடாம்புலியூரில் நடக்கும் தி.மு.க., மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டத்தில் பங்கேற்க, தி.மு.க., மாவட்ட செயலர் அமைச்சர் கணேசன் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.அவரது அறிக்கை; முதல்வர் ஸ்டாலின் உத்தரவின்படி கடலுார் தி.மு.க., மேற்கு மாவட்ட செயற்குழு கூட்டம் நாளை (27ம் தேதி) காலை 11:00 மணியளவில் காடாம்புலியூரிலுள்ள எ.வி., திருமண மண்டபத்தில் நடக்கிறது. தி.மு.க., மாவட்ட அவைத் தலைவர் நந்தகோபாலகிருஷ்ணன் தலைமை தாங்குகிறார். இதில், முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை சிறப்பாக கொண்டாடுவது, நாடாளுமன்ற தேர்தல், கட்சி பணிகள் குறித்து ஆலோசிக்கப்படுகிறது. இதில், தி.மு.க., மாவட்ட நிர்வாகிகள், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், முன்னாள் இன்னாள் எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்கள், ஒன்றிய, நகர, பேரூர் செயலர்கள், அனைத்து சார்பு அணி நிர்வாகிகள், விருத்தாசலம், திட்டக்குடி, நெய்வேலி, பண்ருட்டி சட்ட சபை தொகுதிகளின் பூத் கமிட்டி நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், ஒருங்கிணைப்பாளர்கள் உட்பட அனைவரும் தவறாமல் பங்கேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி