உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / சேலத்தில் தி.மு.க., இளைஞரணி மாநாடு; கடலூரில் இருந்து 10 ஆயிரம் பேர் பங்கேற்பு அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்

சேலத்தில் தி.மு.க., இளைஞரணி மாநாடு; கடலூரில் இருந்து 10 ஆயிரம் பேர் பங்கேற்பு அமைச்சர் பன்னீர்செல்வம் தகவல்

கடலுார் : சேலத்தில் வரும் 21ம் தேதி நடைபெறவுள்ள தி.மு.க.,இளைஞரணி மாநாட்டிற்கு கடலுார் கிழக்கு மாவட்டத்தில் இருந்து 10 ஆயிரம் இளைஞர்கள் கலந்து கொள்வார்கள் என உழவர் நலத்துறை அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.இது குறித்து அவர் விடுத்துள்ள அறிக்கை:தமிழக முதல்வர் வழிகாட்டுதலின்படி, விளையாட்டு மேம்பாடு அமைச்சர் உதயநிதி தலைமையில் நாளை சேலம் பெத்தநாயக்கன்பாளையத்தில் நடைபெறும் தி.மு.க., இளைஞர் அணி 2வது மாநில மாநாட்டில் கடலுார் கிழக்கு மாவட்ட தி.மு.க., இளைஞர் அணி சார்பில், மாநகர, ஒன்றிய, நகர, பகுதி, பேரூர் ஆகிய பகுதிகளுக்குட்பட்ட ஊராட்சி, வட்டம், வார்டு வாரியாக 10.000 (பத்தாயிரம்) இளைஞர்கள் கலந்துக் கொள்ளும் பெயர் பட்டியல் மற்றும் எண்ணிக்கை, ஒன்றியம் வாரியாக தயாரிக்கப்பட்டுள்ளது.இதில் காட்டுமன்னார்கோவில் கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியம், குறிஞ்சிப்பாடி வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியம், திருமுட்டம் கிழக்கு , மேற்கு மற்றும் வடக்கு ஒன்றியம், கடலுார் கிழக்கு ஒன்றியம். மேற்கு . வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியம்.புவனகிரி கிழக்கு மற்றும் மேற்கு ஒன்றியம் , கீரப்பாளையம் கிழக்கு ,மேற்கு ஒன்றியம், கம்மாபுரம் வடக்கு,தெற்கு மற்றும் மத்திய ஒன்றியம், பரங்கிப்பேட்டை வடக்கு மற்றும் தெற்கு ஒன்றியம் ஆகிய ஒன்றியங்களிலிருந்து 10,000 பேர் பங்கேற்கும் வகையில் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை