| ADDED : நவ 28, 2025 05:01 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே ஏ.டி.எம்., மிஷினை உடைக்க முயன்ற போதை ஆசாமியை போலீசார் கைது செய்தனர். விருத்தாசலம் அடுத்த பரவளூர் கிராமத்தில் தனியார் ஏ.டி.எம்., மிஷின் உள்ளது. இதில், விருத்தாசலம் காந்திநகரைச் சேர்ந்த சிவக்குமார், 40, என்பவர் வாட்ச்மேனாக பணிபுரிகிறார். இந்நிலையில், நேற்றுமுன்தினம் காலை ஏ.டி.எம்., மெஷின் முன்பக்கம் உடைந்திருப்பதாக அந்த இடத்தின் உரிமையாளர் சிவக்குமாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், சிவக்குமார் வந்து சி.சி.டி.வி., காட்சி பதிவுகளை கொண்டு ஆய்வு செய்தார். அதில், மர்மநபர் ஒருவர் கல்லால் ஏ.டி.எம்., மிஷினை உடைத்து திருட முயன்றுள்ளார். இதுகுறித்து, சிவக்குமார் கொடுத்த புகாரின் பேரில், விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, சி.சி.டி.வி., காட்சி பதிவுகளில் பதிவான நபர் யார் என விசாரணை மேற்கொண்ட னர். அதில், விருத்தாசலம் மேட்டுக்காலனியை சேர்ந்த ஆனந்த், 30, என்பவர் மதுபோதையில் ஏ.டி.எம்., மிஷினை உடைக்க முயன்றது தெரிய வந்தது.அதைத்தொடர்ந்து, போலீசார் அவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.