உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

விருத்தாசலம், : விருத்தாசலம் மின்துறை செயற்பொறியாளர் அலுவலகம் முன், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு, கோட்ட தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர்கள் ஜெயராமன், செந்தில்குமார், இணை செயலர்கள் சேகர், ஷர்மிளா முன்னிலை வகித்தனர்.மாநில துணைத் தலைவர் ரங்கராஜன், மாநில துணை பொதுச்செயலர் பழனிவேல், மாவட்ட செயலர்கள் தேசிங்கு, வெங்கடாசலம், இணை செயலர்கள் ஆறுமுகம், ராஜகோபால் பேசினர். துணைத் தலைவர் கண்ணன், இணை செயலர்கள் ரவிச்சந்திரன், சிவராஜன், மாநில செயற்குழு வீரமணி மற்றும் நிர்வாகிகள் பங்கேற்றனர்.இதில், மின்வாரியத்தை மூன்று கழகங்களாக பிரிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முத்தரப்பு ஒப்பந்தத்தை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி