உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விஜயை காண ரசிகர்கள் குவிந்தனர்: கடலூர் சாலையில் டிராபிக் ஜாம்

விஜயை காண ரசிகர்கள் குவிந்தனர்: கடலூர் சாலையில் டிராபிக் ஜாம்

புதுச்சேரி : புதுச்சேரியில் நடிகர் விஜயை காண ரசிகர்கள் குவிந்ததால், கடலுார் சாலையில் போக்குவரத்து முற்றிலுமாக பாதிக்கப்பட்டது.தமிழ் சினிமா முன்னணி நடிகரான விஜய், கடந்த 2ம் தேதி தமிழக வெற்றி கழகம் என்ற புதிய கட்சி அறிவிப்பை வெளியிட்டு, தனது அரசியல் பயணத்தை துவங்கியுள்ளார்.அவர் நடிக்கும் 'கோட்' சினிமா படப்பிடிப்பு இரு நாட்களாக புதுச்சேரி ஏ.எப்.டி., மில் வளாகத்தில் நடைபெற்று வருகிறது.படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ள விஜயை காண அவரது ரசிகர்கள், மன்ற நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் நேற்று மதியம் 3:00 மணி முதல் படப்பிடிப்பு நடைபெற்று வரும் ஏ.எப்.டி., மில் வளாகம் முன் குவிந்தனர்.மாலை 4:00 மணிக்கு, ரசிகர்கள் கூட்டம் கட்டுக்கடங்காமல் கூடியதால், கடலுார் சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.பஸ் நிலைய மார்க்கத்தில் இருந்து வந்த வாகனங்கள், கோர்ட் அருகே 'யூ-டர்ன்' போட்டு திரும்பி சென்றன. மாலை, 4:30 மணிக்கு, நடிகர் விஜய் ஏ.எப்.டி. மில் வளாகத்தில் நிறுத்தப்படடிருந்த வேன் மீது ஏறி ரசிகர்களை பார்த்து கையசைத்தார். ரசிகர்கள் மலர் துாவியும், பலுான் பறக்கவிட்டு வாழ்த்து தெரிவித்தனர்.பின்னர் விஜய், தனது ரசிகர்களுடன் 'செல்பி எடுத்துக் கொண்டு மீண்டும் படப்பிடிப்பிற்கு புறப்பட்டார். அதன் பிறகே கூட்டம் கலைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ