உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  கோனோவீடர் கருவி விவசாயிகள் கோரிக்கை

 கோனோவீடர் கருவி விவசாயிகள் கோரிக்கை

குறிஞ்சிப்பாடி: குறிஞ்சிப்பாடி நெல் விவசாயிகள் கோனோவீடர் கருவி வழங்குமாறு, கோரிக்கை விடுத்துள்ளனர். குறிஞ்சிப்பாடி மற்றும், குள்ளஞ்சாவடி சுற்றுப்பகுதி கிராமங்களில் ஏராளமான விவசாயிகள் இயந்திர நடவு மூலம் நெல் மகசூல் செய்கின்றனர். ஆள் பற்றாக்குறை, கூலி உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால் சிறு, குறு விவசாயிகள் கூட தற்போது இந்த முறைக்கு மாறி வருவதாக கூறுகின்றனர். இயந்திர நடவு செய்யும் நெல் விவசாயிகளுக்கு களையை கட்டுப்படுத்துவது சவாலாக உள்ளது. களையை கட்டுப்படுத்தும் கோனோவீடர் கருவி பயன்படுத்தினால், களை மண்ணுக்குள்ளேயே மக்கி, நிலத்திற்கு எருவாக அமைகின்றது. குறிஞ்சிப்பாடி வேளாண்துறை அதிகாரிகள் இப்பகுதி வட்டார விவசாயிகளுக்கு மண்வெட்டி, அரிவாள், களை கொத்தி, பாண்டு, கடப்பாரை மட்டுமே வழங்குவதாக விவசாயிகள் புகார் கூறுகின்றனர். அயன் குறிஞ்சிப்பாடி உழவர் மன்ற விவசாயிகள் தாங்களாக தனியார் ஆராய்ச்சி நிறுவனங்கள் மூலம் கோனோவீடர் கருவிகளை பெற்று, தங்கள் நெல் வயல்களில் களை எடுக்கின்றனர். ஆனால் அவற்றை கொண்டு அனைத்து விவசாயிகளும் பயனடைய முடியவில்லை என, அப்பகுதி விவசாயிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனர். மாவட்ட நிர்வாகம், குறிஞ்சிப்பாடி வேளாண்துறை அதிகாரிகள் விவசாயிகளுக்கு போதுமான கோனோவீடர் கருவிகளை வழங்க முன்வர வேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை