உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / கனமழை பெய்யுமா என விவசாயிகள் ...  அச்சம்; நிலத்தை தயார்படுத்தி சாகுபடி செய்யாமல் தயக்கம்

கனமழை பெய்யுமா என விவசாயிகள் ...  அச்சம்; நிலத்தை தயார்படுத்தி சாகுபடி செய்யாமல் தயக்கம்

கடலுார்: மணிலா மற்றும் தோட்டக்கலை பயிர் செய்யும் விவசாயிகள் நிலத்தை தயார் செய்தும் மீண்டும் கனமழை பெய்து சாகுபடி செய்த பயிரை நாசம் செய்துவிடுமோ என அச்சத்திற்குள்ளாகி வருகின்றனர். கடலுார் மாவட்டத்தில் 20 ஆயிரம் ஏக்கரில் மணிலா பயிர் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது விதை போட்டு 3 மாதங்களில் அறுவடையாகும் இந்த பயிர் விவசாயிகளுக்கு சிறந்த லாபத்தை கொடுக்கிறது. மேலும் மணிலா பயிருக்கு பெரிய அளவிலான பூச்சி தாக்குதல் போன்றவை இல்லை. அதனால் தான் விவசாயிகள் மழை முடியும் தருவாயிலேயே சாகுபடியை துவக்குவது வழக்கம். தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை டிசம்பர் வரை நீடிக்கும். இந்த ஆண்டு அக்டோபரில் துவங்கிய போதும் கடை சி நேரத்தில் எதிர்பார்த்ததை விட கூடுதல் மழை பெய்தது. கனமழை பெய்யக்கூடிய நவம்பர் மாதத்தில், 24 நாட்கள் உருண்டோடிவிட்டன. கடலுார் மாவட்டத்தில் 10 ஆண்டு சராசரி மழையளவு 12 00 மி.மீட்டர் ஆகும். அதில் வடகிழக்கு காற்றின் மூலம் நமக்கு 790 மி,மீ., மழை பெய்ய வேண்டும். அக்டோபரில் 180 மி.மீ; நவம்பர் மாதம் 400 மி.மீ; டிசம்பர் மாதம் 210 மி.மீ; என மழை பெய்ய வேண்டும். இதுவரை கிட்டத்தட்ட 60 சதவீத மழை மட்டுமே கிடைத்துள்ளது. ஆனால் பெரிய அளவிலான மழை பெய்யவில்லை. கடலுார், விருத்தாசலம், குறிஞ்சிப்பாடி, பண்ருட்டி பகுதிகளில் மணிலா, கத்தரி, மரவள்ளி, காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் வரும் 26ம் தேதி மீண்டும் வங்கக்கடலில் புயல் சின்னம் உருவாகிறது என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதன் காரணமாக கனமழை பெய்துவிடுமோ என்கிற அச்சம் விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதில் மணிலா விதை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய பயிராகும். அதனால் மழை அதிகளவில் பெய்து தண்ணீர் தேங்கிவிட்டால் விதை அழுகி விவசாயிகளுக்கு அதிகளவு நஷ்டம் ஏற்படும். அதனால் மழையில்லாமல் இருக்கும் நேரத்தில் தான் மணிலா சாகுபடி செய்வது வழக்கம். ஆனால் நவம்பர் கடைசி வாரத்தில் சாகுபடி செய்தால்தான் பூச்சி தாக்காமல், உரம், தண்ணீர் செலவு ஆகியவை குறைவாக அறுவடையின்போது திருப்திகரமாக இருக்கும். எனவே தான் இந்த சீசனில் முன்கூட்டியே நிலத்தை தயார் செய்து விவசாயிகள் வைத்துள்ளனர். இந்நிலையில் மிகவும் கனமழை பெய்துவிட்டால் என்ன செய்வது என விவசாயிகள் மணிலா மற்றும் தோட்டக்கலை பயிர் செய்வதில் தயக்கம் காட்டி வருகின்றனர். எப்படி இருந்தாலும் வரும் புயல் சின்னத்தை கடந்த பின்னர் தான் மணிலா பயிர் செய்ய முடியும் என்கின்றனர் விவசாயிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை