உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / விருத்தாசலம் நகராட்சியில் உரம் விற்பனை துவக்கம்

விருத்தாசலம் நகராட்சியில் உரம் விற்பனை துவக்கம்

விருத்தாசலம் : விருத்தாசலம் நகராட்சியில் உள்ள 33 வார்டுகளில் பொதுமக்கள் பயன்படுத்தும் கழிவு பொருட்களை மக்கும் குப்பை, மக்காத குப்பை என பிரித்து நகராட்சி நிர்வாகம் சேகரித்து வருகிறது.இதில், மக்கும் குப்பைகளை உரமாக்கி அதனை செடி, கொடி உள்ளிட்ட காய்கறி தோட்டங்களில் பொதுமக்கள் பயன்படுத்தும் விதம் செழிப்பு உரமாக தயாரித்து விற்பனை செய்யும் பணி துவங்கப்பட்டது.நகராட்சி அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, நகராட்சி கமிஷனர் பானுமதி தலைமை தாங்கி விற்பனையை துவக்கி வைத்தார்.மேலாளர் கனிமொழி, பணி ஆய்வாளர் ராஜாராம், துப்புரவு அலுவலர் பூபதி, சுகாதார ஆய்வாளர் சிவராமகிருஷ்ணன் மற்றும் துாய்மை திட்ட பணியாளர்கள் பலர் உடனிருந்தனர்.ஒரு கிலோ செழிப்பு உரம் ரூ.10க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஆலிச்சிக்குடி ரோடு, பாலக்கரை, பஸ் நிலையத்தில் உள்ள நகராட்சி அலுவலகங்களிலும், கண்டியங்குப்பம், பெரிய வடவாடி குப்பை கிடங்குகளிலும் இந்த செழிப்பு உரம் விற்பனை செய்யப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை