| ADDED : ஜன 05, 2024 12:18 AM
கடலுார் : கடலுார் அருகே தாழங்குடா மீனவ கிராமத்தில், ரூ.13 கோடியில் கட்டப்பட்ட மீன்பிடி இறங்குதளத்தை காணொளி காட்சி மூலம் முதல்வர் திறந்து வைத்தார்.கடலுார் அடுத்த தாழங்குடா மீனவ கிராமத்தில், 13 கோடி ரூபாய் மதிப்பில் மீன்பிடி இறங்குதளம் கட்டப்பட்டது. இங்கு, மீன்கள் விற்பனை செய்யும் மீன் ஏலக்கூடம், கருவாடு உலர் தளம், சாலை வசதி, கடல் அரிப்பு தடுப்பு கற்சுவர் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்தின் கீழ் தென்பெண்ணை ஆறு கடலில் கலக்கும் முகத்துவார பகுதியும் ஆழப் படுத்தப்பட்டுள்ளது.இந்த மீன்பிடி இறங்குதளத்தை காணொளி காட்சி மூலம் முதல்வர் ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். தாழங்குடாவில் நடந்த நிகழ்ச்சியில், அய்யப்பன் எம்.எல்.ஏ., மற்றும் டி.ஆர்.ஓ., ராஜசேகர் ஆகியோர் குத்துவிளக் கேற்றினர்.மீன்வளத்துறை இணை இயக்குனர் வேல்முருகன், உதவி இயக்குனர் குமரேசன், உதவி செயற்பொறியாளர் கவுரிசங்கர், கூட்டுறவு சங்க தலைவர் ஆதிபெருமாள், ஊராட்சி தலைவர் சாந்தி, முன்னாள் ஊராட்சி தலைவர்கள் குப்புசாமி, சுதாகர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.