உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  பிச்சாவரத்தில் 6,000 பறவைகள்: வனத்துறை கணக்கெடுப்பில் தகவல்

 பிச்சாவரத்தில் 6,000 பறவைகள்: வனத்துறை கணக்கெடுப்பில் தகவல்

கிள்ளை: பிச்சாவரம் வனக்காடுகளில் உள்நாடு மற்றும் வெளிநாட்டைச் சேர்ந்த 6,000 பறவைகள் வசிப்பது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. தமிழக முழுவதும் வனத்துறை சார்பில், ஒருங்கிணைந்த பறவைகள் கணக்கெடுக்கும் பணி இரண்டு நாட்கள் நடந்தது. பிச்சாவரம் வனச்சரகத்தில் சதுப்பு நில காடுகள் மற்றும் அதனை சுற்றியுள்ள ஈரநில பகுதிகளில் கடலுார் மாவட்ட வன அலுவலர் குருசாமிமேற்பார்வையில் பறவைகள் கணக்கெடுப்பு பணி நடந்தது. இப்பணியில் பிச்சாவரம் வனச்சரக அலுவலர் இக்பால், வனவர் ராஜேஷ்குமார், வனக்காப்பாளர்கள் விக்னேஷ்பிரபு, ஞானசேகர், சரளா, அபிராமி, ஜெயவர்தணன், முத்துக்குமரன், பறவைகள் ஆர்வலர் ஜமீல் ஹீசைன், கால்நடை மருத்துவர்கள், காலநிலை மீள்திறன்மிகு கிராம பணியாளர்கள், சுற்றுலா மேலாண்மைக்குழு உறுப்பினர்கள் மற்றும் அண்ணாமலைபல்கலைக்கழக கடல்வாழ் உயிரின ஆராய்ச்சி மைய தன்னார்வலர்கள் 5 குழுக்களாக பிரிந்து ஈரநிலபறவைகள் மற்றும் இரவாடிகள் கணக்கெடுப்பில் ஈடுப்பட்டனர். 23 வகையான வெளிநாட்டு பறவைகள், 65 வகையான உள்நாட்டு பறவைகள் என மொத்தம் 6 ஆயிரம் பறவைகள்வசிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது. கணக்கெடுப்பில் ஈடுப்பட்டவர்களுக்கு, சான்றிதழ் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை